Skip to main content

மெலனியாவை அசர அடித்த 5 வயது சிறுவனின் நடனம்... வைரலாகும் வீடியோ!

Published on 25/02/2020 | Edited on 26/02/2020

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்த டிரம்ப் மற்றும் மெலனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதன்பின் இரண்டாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் ட்ரம்ப் மற்றும் மெலனியா ஆகியோரை வரவேற்றனர். பின்னர் ட்ரம்புக்கு  முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் மெலனியா இருவரும் ராஜ்காட் சென்று  மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

 


பின்னர், தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்கு சென்ற மெலனியா அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளிக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போது மெலனியா-வின் பின்னால் இருந்த சிறுவன் உற்சாக மிகுதியால் நடனம் ஆடினான். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகின்றது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Next Story

உயிரைப் பறிக்குமா 'கார்பா' நடனம்?; அதிர்ச்சி தரும் தகவல்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

'Garpa' dance can take life; Shocking information

 

நவராத்திரி விழா என்றாலே அதிகம்  களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது 'கார்பா' நடனம்.

 

குஜராத்தை பிறப்பிடமாகக் கொண்ட கார்பா நடனம் விடிய விடிய ஆடும் ஒரு வகை நடனமாகும். பாரம்பரிய ஆடைகளுடன் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இசைக்கு ஏற்ப இடைவிடாமல் விடிய விடிய நடனமாடுவர். இந்த நிகழ்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் 'கார்பா' நடனம் ஆடிய 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்த 10 பேரில் 13 வயது சிறுவன் தவிர மற்ற ஒன்பது பேரும் நடுத்தர வயது கொண்டோர் மற்றும் இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நவராத்திரி விழா தொடங்கிய முதல் ஆறு நாட்களில் மாரடைப்பு தொடர்பாக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என 609 அழைப்புகளும் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு  'கார்பா' நிகழ்ச்சியில் மூன்று பேர் மாரடைப்பால்  உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.