Published on 11/12/2018 | Edited on 11/12/2018

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. மபியில் காங்கிரஸ் பாஜகவுக்கு இழுபரியில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்களும் ஆதரவாளர்களும் இதை கொண்டாட தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், “ நான் சொல்கிறேன், இது காங்கிரஸுடைய வெற்றி இல்லை. மக்களின் கோபத்தின் வெளிபாடுதான். சுய மதிப்பீடு தேவை” என்று கூறியுள்ளார்.