உத்தரப் பிரதேச மாநிலம், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் முகமது ஆசம் கான். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவர் . இவர் மீது வீட்டு உரிமையாளர் ஒருவர், கடந்த 2016ஆம் ஆண்டு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். உத்தரப் பிரதேச மாநிலம், துங்கர்பூர் பகுதியில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் அப்ரார் அளித்த புகாரில், ‘கடந்த 2016ஆம் ஆண்டு அலே ஹாசன் மற்றும் ஒப்பந்ததார பரகத் அலி ஆகிய இருவரும் எனது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தி என்னை தாக்கிவிட்டு, விட்டை கொள்ளையடித்தனர். மேலும் அவர்கள், என்னை கொலை செய்யவும், எனது வீட்டை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கவும் முயன்றார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த விவகாரத்திற்கு பின்னால், சமாஜ்வாதி கட்சி எம்.பி அகமது ஆசம் கான் சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியானது. அதன்படி, எம்.பி அகமது ஆசம் கான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு உத்தரப் பிரதேசம் ராம்பூரில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், முகமது ஆசம் கான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.14 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.