உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக் கட்டுப்பாடு தொடர்பாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜூன் 1- ஆம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021- 2022 ஆம் சந்தை ஆண்டில் 90 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதிச் செய்ய, இதுவரை ஆலைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 75 லட்சம் டன் சர்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடப்பு சந்தையாண்டு நிறைவடைய நான்கு மாதங்களே மீதமுள்ள நிலையில், மொத்தம் ஒரு கோடி டன் சர்க்கரையை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பிரேசிலை அடுத்து, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.