Skip to main content

வேளாண் மசோதாவிற்கு எதிராக தீர்மானம் - ஆளுநர் திடீர் அனுமதி!

Published on 26/12/2020 | Edited on 28/12/2020

 

 Resolution against the Agriculture Bill-Governor's Permission!

 

வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் சூழ்நிலையில், பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தங்களை எதிர்க்க முன்வந்துள்ளன. தற்பொழுது வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற, 31 ஆம் தேதி கேரள சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் நடத்த அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

 

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று கூட்டத்திற்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 23-ஆம் தேதி நடத்தவிருந்த சிறப்புக் கூட்டத்திற்கு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது 31-ஆம் தேதி கேரள பேரவை சிறப்புக் கூட்டத்திற்கு ஆளுநர் திடீரென அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்