Skip to main content

ரேஷன் கார்டில் இயேசு கிருஸ்து படம்... சர்ச்சையில் சிக்கிய மாநில அரசு!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக, இயேசு கிறஸ்து படம் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த ரேஷன் கார்டு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மறுபுரம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால், அவர் கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிக்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் அரசு பஸ்சில், இயேசுவே உண்மையான கடவுள், ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு அரசு உதவி என்ற விளம்பரம் அச்சடிக்கப்பட்டது வைரலாகி, ஜெகன் அரசை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் ரேஷன் கார்டில் இயேசு படம் அச்சிடப்பட்ட விவகாரத்தை அம்மாநில அரசு மறுத்துள்ளது. 
 

fg



இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், வத்லமாறு என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், ரேஷன் கார்டில், ஏசு கிறிஸ்துவின் படத்தை அச்சிட்டு சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. இதே நபர், கடந்த 2016ம் ஆண்டில், சாய்பாபா படத்தையும், 2017 மற்றும் 2018ல் திருப்பதி வெங்கடாஜலபதி படத்தையும் ரேஷன் கார்டில் அச்சிட்டுள்ளார். இயேசுவின் புகைப்படத்தை ரேஷன் கார்டில் பதிவிட்டு, சமூக அமைதியை குலைக்கும் வகையில், சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்