Skip to main content

நிதின் கட்கரிக்கு மட்டும் தான் தைரியம் உள்ளது- ராகுல் காந்தி...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

dfgvdfvdf

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி மூலம் பாஜக வை விமர்சிக்கும் வகையில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சனிக்கிழமை நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பாஜக தொண்டர்கள் குடும்பப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்க முடியாத ஒருவரால் கண்டிப்பாக நாட்டை நிர்வகிக்க முடியாது என கூறினார். இது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் கருத்து கூறினர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், 'பாஜக கட்சியில் நீங்கள் ஒருவர் தான் தைரியமானவர். மேலும் உங்களது இந்த தைரியத்தை அணில் அம்பானி விவகாரம், ரபேல் ஊழல், சிபிஐ விவகாரம் ஆகியவற்றிலும் காட்ட வேண்டும் என விரும்புகிறேன்' என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்