இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. என்னும் இருவகை ராக்கெட்டுகளையும் மற்றும் பல்வேறு செயற்கைகோள்களையும் வடிவமைத்து விண்ணில் செலுத்திவருகிறது.
இஸ்ரோவும் மற்றும் அதன் வணிகக் கிளையுமான 'ஆண்டிரிக்ஸ்' நிறுவனமும் இணைந்து வணிக நோக்கில் இங்கிலாந்துக்கு சொந்தமான 'நோவாசர்' மற்றும் 'எஸ்-14' ஆகிய இரு செயற்கை கோள்களை நேற்று இரவு 10.08 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் முதல் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி, சி-42 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இது வெள்ள கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு, நில பயன்பாடு மேப்பிங், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல் பயன்பாடு உள்ளிட்ட புவியின் கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.