Skip to main content
Breaking News
Breaking

காங்கிரஸோடு கைகோர்த்த பிரசாந்த் கிஷோர்!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

prasant kishor

 

தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்து வருகிறார். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறப்போகும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க-வுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

 

இந்தநிலையில் பஞ்சாப் மாநில ஆளுங்கட்சியான காங்கிரசோடு பிரசாந்த் கிஷோர் கைகோர்த்துள்ளார். அடுத்தாண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் அமரீந்தர் சிங், பிரசாந்த் கிஷோர், எனது முதன்மை ஆலோசகராக இணைந்துள்ளார். பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் பஞ்சாபில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் பெரும் வெற்றியை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்