Skip to main content

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு?

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
Petrol, diesel prices likely to decrease

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விலை குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பது பற்றி மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது பெட்ரோல் பங்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்புகளை ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இவ்வாறு உயர்த்தப்பட்ட கமிஷன் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகளை மேற்கோள்காட்டி மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில்  88 ஆயிரம் பெட்ரோல் பங்குகளின் 7 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி ஒடிசாவில் பெட்ரோல் விலை 4 ரூபாய் 69 காசுகள் குறை வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

சார்ந்த செய்திகள்