நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆளுநர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், ஆளுநர்கள் அமைச்சரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படவும் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அறிமுகப்படுத்தும் போதே பாஜக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே இந்த தனிநபர் மசோதா குறித்து ஜான் பிரிட்டாஸ் விளக்கத்தை அளிக்க வேண்டும் என மாநிலங்கவைத் துணைத் தலைவர் தெரிவித்தார். அப்போது ஜான் பிரிட்டாஸ், “ஆளுநர் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதிராக தொடர்ந்து நடந்து கொள்கின்றனர். எனவே ஆளுநரின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் செயல்பாடுகள் இருக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி இந்த தனிநபர் மாசோதா கொண்டுவரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதே சமயம் இதற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அளுநர் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் ஆவார். ஆனால் மாநில அமைச்சரவை அதிகாரத்திற்கு உட்பட்டார் அல்ல என்பதை வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
முன்னதாக மசோதாக்களை தாமதப்படுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தொடர்ந்த வழக்கில் இது தொடர்பாக விளக்கமளிக்க ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.