![online games money youth incident police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/0eBG-ICDyENlEO0uMOjyWynb-qOj20VBOY2n4gVRG8o/1667877822/sites/default/files/inline-images/hodpit.jpg)
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியான வேதனையில் சமையல் கலைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் சோம்பட்டைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. புதுச்சேரியில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்த அய்யனார், ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக, ஏராளமானோரிடம் கடன் வாங்கியதோடு ஆன்லைன் செயலியிலும் கடன் பெற்று பணநெருக்கடியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் சுமை அதிகரித்ததால், மன உளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அய்யனார் புதுச்சேரியில் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலைக் கைப்பற்றிய ஒதியஞ்சாலை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியானதால் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் மனைவிக்கு உருக்கமான ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு தூக்கிட்டது விசாரணையில் தெரியவந்தது.