Published on 21/03/2020 | Edited on 21/03/2020
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,000த்தை கடந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,000 மேல் அதிகரித்துள்ளது. இத்தாலியில் 3,405, சீனாவில் 3,245, ஈரானில் 1,284, ஸ்பெயினில் 831 பேர் கரோனாவால் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.