Skip to main content

கரையை கடந்தது 'நிசர்கா' புயல்...

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
 'Nisarga' storm crossing shore

 

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற்றமடைந்து மஹாராஷ்டிரா மாநிலத்தை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரபிக் கடலில் உருவான 'நிசர்கா' புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலம், அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையை கடந்து இருக்கிறது. கடக்கும்போது 100 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 110 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசியது. தற்போது அந்த புயல் கரையை கடந்ததால் நிசர்கா புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்