Skip to main content

கூடுதல் ஹெலிகாப்டர்கள் கேரளாவுக்கு அனுப்படுகிறது-நிர்மலா சீதாராமன்

Published on 17/08/2018 | Edited on 17/08/2018

 

கடந்த 50வருடங்களில் வரலாறு காணாத மழையை சந்தித்தது கேரளா. இதனால், 14 மாவட்டங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்திருக்கிறது. அத்துடன் மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது. இதுவரை 8000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது என்று கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரிடர் மீட்புக்குழுவும் மத்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலையில் கேரளா முதல்வரை தொடர்புகொண்டு கேரளாவில் நடக்கும் மீட்டுப்புப்பணிகள் குறித்து பேசியதாகவும். மேலும், மீட்புப்பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்புமாறு பினராயி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரது கேட்டுக்கொண்டதை போல, கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு உத்தரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.       

 

 

சார்ந்த செய்திகள்