1945ம் ஆண்டில் தைவான் நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் ஆவணங்கள் வெளியிட்டாலும், அவர் விமான விபத்தில் இறக்கவில்லை. கும்னாமி பாபா என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த சந்தேகத்தினால் 2016ம் ஆண்டில் நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. நேதாஜி தொடர்பான தகவல்களையும், கும்னாமி தொடர்பான தகவல்களையும் இக்குழு சேகரித்தது. இத்தகவல்கள் அடங்கிய அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உ.பி. அரசிடம் வழங்கியது விசாரணைக்குழு.
அந்த அறிக்கையில், நேதாஜிக்கு ஆங்கிலம், வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகள் சரளமாக தெரியும். அதே போல் கும்னாமி பாபாவுக்கும் அதே மூன்று மொழிகள் சரளமாக தெரிந்துள்ளது. பைசாபாத் வீட்டில் வசித்து வந்தபோது கும்னாமிதான் நேதாஜி என்ற சந்தேகம் வலுத்தபோது அதுவரை வசித்து வந்த வீட்டை விட்டு மாயமானார். ஆனாலும், நேதாஜிதான் கும்னாமி பாபாவா? என கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.