Published on 07/03/2019 | Edited on 07/03/2019

ஜம்முவில் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வீசி தாங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்து வரும் தொடர் சண்டைகள் ஜம்மு காஷ்மீரில் பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஜம்மு நகரின் பேருந்து நிலையத்தில் 11 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 28 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நடந்த விசாரணையில் யாசின் என்பவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.