உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மஹாராஷ்ட்ராவில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக, மஹாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகிறது. நேற்று (18.04.2021) ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் அமலில் உள்ள அங்கு, மாநில அரசு தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கேரளா, கோவா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உத்திரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து மஹாராஷ்ட்ரா வருவோர் 48 மணி நேரத்துக்கு முன் எடுத்த கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.