மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று (16/07/2022) டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நாளை (18/07/2022) ஜெகதீப் தன்கர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை இன்று (17/07/2022) ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பினார்.
அதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்க ஆளுநரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனுக்கு மேற்கு வங்க ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் இல.கணேசன் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.