Skip to main content

ஆந்திராவில் கார் தயாரிப்பை தொடங்கும் கியா மோட்டார்ஸ்...

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

kk

 

தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ‘கியா’ அதன் புதிய உற்பத்தி ஆலையை 536 ஏக்கர் பரப்பளவில் ஆந்திராவில் தொடங்கியுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவந்தது. இது தற்போது முடிந்து, இன்று அதன் திறப்பு விழா நடந்தது. இந்த திறப்பு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கியா மோட்டார்ஸின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் கூஹயூன் ஷிம் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

 

இந்த திறப்பு விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதல் பிரிவு அதிகாரி மனோகர் பட் (Manohar Bhat) "நமது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு எஸ்.பி.2 ரகம். இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும். மேலும் கியா மோட்டார்ஸ் ஆறு மாதத்திற்கு ஒரு புதிய மாடல் காரையும் அறிமுகம் செய்யும், கியா கார் விற்பனை வரும் ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 9 முதல் ரூ. 16 இலட்சம் வரை இருக்கும்” என்று தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமே கியா மோட்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்