Published on 13/09/2021 | Edited on 13/09/2021

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்புகள் குறைந்து வந்தநிலையில், கேரளாவில் மட்டும் கரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது கேரளாவிலும் தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.
நேற்று கேரளாவில் 20, 240 ஆக இருந்த தினசரி கரோனா பாதிப்பு, இன்று 15,058 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல் நேற்றைய தினம் 17.51 ஆக இருந்த கரோனா உறுதியாகும் சதவீதம் இன்று 16.39 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் நேற்று கரோனாவால் 67 மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், இன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட 99 பேர் உயிரிழந்துள்ளனர்.