கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, துறை ரீதியாக நடந்த ஒரு கூட்டம் குறித்து நேற்று மாலை 5 மணிக்கு முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் ஒருவர் "வேறு வழியில்லாமல் இதை நான் உங்களிடம் கேட்கிறேன். எனது சகோதரிக்கு இன்று காலையில் பிரசவம் நடந்தது. பிறந்த குழந்தைக்கு துரதிர்ஷ்டவசமாக வால்வு பிரச்சினை உள்ளது. உடனடியாக அம்ருதா அல்லது ஸ்ரீசித்ரா மருத்துவமனைக்குச் சென்று அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அந்த மருத்துவமனைகளில் விசாரித்தபோது படுக்கைகள் காலி இல்லை என்று கூறிவிட்டார்கள். எனவே நீங்கள்தான் எப்படியாவது உதவவேண்டும்" என்று கமென்ட் செய்திருந்தார்.
கமென்டிட்ட இரண்டு மணி நேரத்தில் அமைச்சர் இப்படி பதிலளித்திருந்தார். "உங்கள் கமென்டைப் பார்த்ததும் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் 'ஹ்ருதயம்' திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் அது குறித்து அறிக்கை பெறப்பட்டது. குழந்தைக்கு ஹ்ருதயம் திட்டம் மூலம் இலவசமாகவே அறுவைச் சிகிச்சை வழங்கமுடியும். எர்ணாகுளம் லிசி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு நடந்துவருகிறது. குழந்தையைக் கொண்டுவருவதற்காக அங்கிருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது. இன்று இரவே குழந்தையை லிசி மருத்துவமனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது"
அமைச்சரென்றால் இப்படி இருக்கவேண்டும். என்ன அக்கறை... என்ன வேகம்..!