Skip to main content

கர்நாடகா முதல்வர் குமாரசாமி இரவு தூங்கமாட்டார்: மத்திய அமைச்சர் பேச்சு!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019


கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்கும் நிலையில், கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கர்நாடகாவில் இரு சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைப்பெற்றது. அந்த தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெரும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளதை பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

kumarasamy

 

 

மேலும் அவர் கூறுகையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி பிளவுறும் எனவும், அதை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறினார். ஏற்கனவே கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் என இரண்டும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும், அவரின் அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் தருவதால் நாளைய வாக்கு எண்ணிக்கை கர்நாடக மாநிலத்திற்கு நிரந்தர அரசை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

 

 

 

சார்ந்த செய்திகள்