காமசூத்ரா படத்தில் நடித்த நடிகை சாயிரா கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு 3 டி தொழில்நுட்பத்தில் வெளிவந்த படம் காமசூத்ரா. இந்தப் படத்தில் நடிகை சாயிராகான் நடித்திருந்தார். ரூபேஷ் பவுல் இந்தப் படத்தை இயக்கினார்.
சாயிரா கான் மரணம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள படத்தின் இயக்குநர் ரூபேஷ் பவுல், ’’சாயிரா கான் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தச் செய்தியை யாரும் வெளியிடாதது வருத்தமளித்தது. திறமையான நடிகையாக இருந்தும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த சாயிராவை இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்ய சவாலாக இருந்தது. ஒருசில மாதங்கள் தொடர் முயற்சிக்குப் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.