Published on 06/06/2022 | Edited on 06/06/2022
ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையதளம் மற்றும் செயலி மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கான வரம்பை இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது.
தற்போது வரை, ஆதார் எண்ணை இணைக்காமல் பயனர் அடையாளத்தைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் செயலியில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனர் அடையாளத்தைப் பயன்படுத்தி மாதத்திற்கு 12 பயணச் சீட்டுகள் வரை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும்.
இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் பயனர் அடையாளத்தைப் பயன்படுத்தி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்ற விதி தற்போது 24 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம், பயணிகள் தாங்களாகவே தங்களுக்கு தேவையான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.