Published on 18/08/2020 | Edited on 18/08/2020

கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமித்ஷா பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.