இராமேஸ்வரம் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் சார்பில் அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் இயக்கத்தின் செயல்திட்டம் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 12 மணிநேரம் தொடர்ச்சியாக ஓவியம் வரையும் முகாம் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்தது.
ஆரோதன் கலை அருங்காட்சியகத்தலைவர் லலித் வர்மா ஓவிய முகாமை துவக்கி வைத்தார். அஸ்சிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ராஜேந்திரன் தனது வாயில் பிரஷை பிடித்துக் கொண்டு அப்துல் கலாம் உருவ ஓவியம் வரைந்தார். 6ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் இதில்கலந்து கொண்டனர்.விழிப்புணர்வு ஓவிய முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு வழங்கினார்.