உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இன்று நடந்த தொழில்வளர்ச்சி திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
"நோக்கம் தெளிவாக இருப்பதால் நான் தயக்கமில்லாமல் தொழிலதிபர்களோடு நிற்கிறேன். எதிர்கட்சிக்காரர்கள் சிலர் தொழிலதிபர்களை திருடர்கள் என்பது போல் பேசுவது கண்டிக்கத்தக்கது. மகாத்மா காந்தியின் நோக்கம் தெளிவாக இருந்ததால் அவர் பிர்லா குடும்பத்தினரின் வீட்டில் தங்க தயங்கியதே இல்லை. அது போல, இந்த நாட்டின் வளர்ச்சியே என் குறிக்கோள். எனக்கு தொழிலதிபர்களுடன் நிற்பதில் தயக்கமில்லை. யாருடனாவது நிற்பதாலேயே ஒருவர் மீது கரை படிந்துவிடாது. என் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள், குறைகள் இந்த தேசம் எழுபது ஆண்டுகளாக சந்தித்து வருபவை. இதற்கு காரணம் எதிர்கட்சிகள்தான்" என்றார்.
இந்த நிகழ்வில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, அதானி குழுமத்தின் கௌதம் அதானி, ஐ.டி.சி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் பூரி உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.