Skip to main content

இந்தியாவின் நிலை மிகவும் கவலையளிக்கிறது - உலக சுகாதார நிறுவனம்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

who chief

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 

இந்தநிலையில், இந்தியாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. பல மாநிலங்களில் கவலைக்குரிய அளவில் கரோனா தொற்று அதிகரிப்பும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், கரோனா உயிரிழப்புகளும் உள்ளன” என கூறியுள்ளார்.

 

மேலும், ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள், தற்காலிக மருத்துவமனை அமைப்பதற்கான டெண்டுகள், முகக்கவசங்கள், பிற மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், முதல் அலையைவிட, இந்த இரண்டாவது கரோனா அலை மோசமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்