இந்தியாவில் உள்ள கல்விநிலையத்தில் இருபாலரும் ஒரேநேரத்தில் பயன்படுத்தும் வகையில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ளது இந்திய மேலாண்மை மேம்பாட்டுப் பள்ளி. இந்தக் கல்விநிலையத்தில் பயின்று வரும் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் கவுசிக் ஹோரே என்னும் மூன்றாம் பாலினரும் பயின்று வந்துள்ளார். இவர் தனக்கு எந்தக் கழிவறையைப் பயன்படுத்துவது என்ற குழப்பம் ஏற்படுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் சில மாதங்களுக்கு முன்னர் முறையிட்டுள்ளார்.
இதுகுறித்து தீர ஆலோசித்த கல்லூரி நிர்வாகம், கழிவறைகள் சுகாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது இதற்காக திறக்கப்பட்டுள்ள கழிவறை முகப்பில் ‘இந்தக் கழிவறையை பாலின பேதமின்றி, அடையாளம் மற்றும் உணர்ச்சிகளைக் கடந்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்’ என ஒட்டப்பட்டுள்ளது.
முதலில் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், தற்போது இந்தக் கழிவறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஒரு விஷயத்தை மேலோட்டமாக அல்லாமல், பரந்த கண்ணோட்டத்தோடு பார்க்கும்போதுதான் அதன் தேவை புரியும். இதேபோல், நாடு முழுவதும் கழிவறைகளை ஏற்படுத்தவேண்டும்’ என கவுசிக் ஹோரே தெரிவித்துள்ளார்.