Published on 09/02/2022 | Edited on 09/02/2022
இந்திய இராணுவத்தின் சினார் கார்ப்ஸ் படைப்பிரிவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திடம் எழுப்பட்டுள்ளதாகவும், ஆனால் பேஸ்புக் இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த முடக்கத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீரின் உண்மையான கள நிலவரத்தை வெளியிடுவதற்காக சினார் கார்ப்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.