
கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலியை முந்தியுள்ளது இந்தியா.
இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9,887 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இதன்மூலம் மொத்தமாக இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும், 6,642 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2.36 லட்சம் பாதிப்புகளுடன் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா ஆறாவது இடத்திற்குச் சென்றுள்ளது. மேலும், கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியின் பாதிப்பு எண்ணிக்கையை இந்தியா கடந்துள்ளது. அதேநேரம், இறப்பு எண்ணிக்கையைக் கணக்கில்கொள்ளும்போது, இத்தாலியில் ஏற்பட்டதில் ஐந்து ஒரு பங்கு இறப்பு மட்டுமே இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகமோசமாகப் பாதி்க்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின்,பிரிட்டனுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.