Published on 06/08/2018 | Edited on 06/08/2018

வட இந்தியா மாநிலங்களில் பலர் பசு காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு அப்பாவிகளை அடித்து துன்புறுத்துகின்றனர், அதில் சிலரின் உயிரும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தடுக்கும் பொருட்டு உத்திரகாண்ட் மாநில அரசு பசு பாதுகாவலர்களை தனியாக நியமித்து அவர்களுக்கு என்று அடையாள அட்டை கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் பசு சேவா ஆயோக் அமைப் பின் தலைவர் என்.எஸ்.ராவத் கூறும்போது, ‘மாநிலம் முழுவதும் உண்மையான பசு பாதுகாவலர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 6 மாவட்டங்களில் கணக்கெடுப்பு முடிந்துள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த திட்டத்தை உத்தராகண்டில் அறிமுகம் செய் கிறோம்’ என்று தெரிவித்தார்.