Skip to main content

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர் நீதிமன்றம்..!            

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

The High Court is ruling today in the case related to Facebook and WhatsApp

 

சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள்தான் உலக அளவில் முதலிடத்தில் இருக்கின்றன. வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் பரிமாற்றம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (22.04.2021) தீர்ப்பளிக்கவிருக்கிறது. ஃபேஸ்புக்கின் குழந்தைதான் வாட்ஸ் ஆப். இந்தச் செயலியின் பயன்பாடு உலக அளவில் 75 சதவீதமாக இருக்கிறது. தனிநபரின் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கடந்த ஆண்டு தனது புதிய கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது. 

 

அதன்படி, வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தனி நபர்களின் தகவல்கள், தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது வாட்ஸ் நிறுவனம். இதனை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளின் விசாரணைகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சூழலில், வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கை, தொழில் போட்டியை தடுப்பதாக வேறுபட்ட குரல்களும் எதிரொலித்தன.

 

அது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தன. இதுகுறித்து இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் பல்வேறு நிறுவனங்களும் முறையீடு செய்தன. இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம், வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில் போட்டியை தடுக்கிறதா என்பதை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு வாட்ஸ் ஆப் நிறுவனத்தை டென்சன்படுத்திய நிலையில், ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. ஒத்தி வைக்கப்பட்டிருந்த அந்த தீர்ப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நான்கு பேருக்கு போலீஸ் கஸ்டடி

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி என 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் (20.07.2024) கைது செய்தனர்.

இந்நிலையில் பூந்தமல்லி சிறையில் இருந்த பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரை மூன்று நாட்களில் காவலில் எடுத்து  விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நான்கு பேரையும் பரங்கிமலை பகுதியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே போலீஸ் கஸ்டடியில்  எடுக்கப்பட்ட  திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா'- அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 'Bharatiya Nyaya Sanhita' on Roadside Vendor - New Criminal Laws Come Into Force

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.