10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 90 தொகுதிகளை மொத்தமாக கொண்ட ஹரியானாவிற்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பொதுத் தேர்தல் அட்டவணை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. ஹரியானா, ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய ஆணையர் ராஜ்குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து நடைபெற இருக்கும் தேர்தல் குறித்து விளக்கங்கள் அளித்து வருகிறார்.
செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு கவசஉடை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தொடர்ந்து நேரலையில் பேசி வருகிறார்.