Skip to main content

பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் இரவில் நுழைந்த துணை தாசில்தார் கைது

Published on 22/01/2023 | Edited on 22/01/2023

 

Deputy Tahsildar Arrested For Entering Female IAS Officer's House At Night

 

பெண்  ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நள்ளிரவில் புகுந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியான சுமிதா சபர்வால். ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு அத்துமீறி நபர் ஒருவர் நுழைந்ததை அறிந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, இதுகுறித்து பாதுகாவலருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக வீட்டில் சோதனை செய்யப்பட்டபோது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வரும் ஆனந்த் என்பது தெரியவந்தது. ஆனந்தையும், அவரை அழைத்து வந்த அவரது நண்பரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பதவி உயர்வு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியிடம் பேசுவதற்காக வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவித்தனர். நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பிச் சென்ற பா.ஜ.க பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The incident that happened to a trusted BJP administrator in telungana

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் நகரில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு(36). தொழிலதிபரான இவர், சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. கட்சியில் இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில், யூசுப்குடா பகுதியில் ராமு பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். அவருடைய அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பிணமாகக் கிடந்த ராமுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்கு இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட ராமுவின் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அதில், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் பேரில், அந்த செல்போன் எண்ணைக் கொண்டு, அந்த பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யூசப்குடா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, இரவு நேரத்தில் ராமு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்த பெண் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் ராமுவை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகரும் தொழிலதிபருமான ராமுவின் முன்னாள் நண்பரான மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தலைமறைவான அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமீபத்தில் ராமுவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.