Published on 02/02/2021 | Edited on 02/02/2021

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன்பிறகு விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்கு எல்லையிலும் கலவரம் வெடித்தது.
இந்த வன்முறை சம்பவங்களால், விவசாயிகள் போராடி வரும் டெல்லியின் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளில் இணையதள வசதி முடக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் எல்லைகளில் பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி விவசாயிகள் கூடுவதை டெல்லி காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளில், டெல்லி காவல்துறையினர் தரையில் ஆணிகளைப் பதித்துள்ளனர். விவசாயிகள் திரள்வதை தடுக்கவும், மற்ற மாநிலங்களிலிருந்து விவசாயிகள் எல்லைகளில் கூடுவதை தவிர்க்கவும் டெல்லி காவல்துறை, இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.