Published on 01/03/2021 | Edited on 02/03/2021
இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.