இந்தியாவில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![corona virus update in india](http://image.nakkheeran.in/cdn/farfuture/lBKQS7QwAQfMrIPUhFQoLIz8d5l0s4LCsRbCESKhMxs/1583141957/sites/default/files/inline-images/zfbzfbf.jpg)
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் ஏற்கனவே மூவருக்கு இந்த வைரஸ் வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமானது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கான வந்த ஒருவருக்கும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.