Published on 25/01/2021 | Edited on 25/01/2021
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், 125வது பிறந்தநாள் கடந்த 23 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இந்தநிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்துவைக்கப்பட்டது உண்மையில் நேதாஜி படமா என சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஏராளமானோர், நேதாஜி படத்திற்கு பதிலாக, நேதாஜியின் வாழ்க்கை படத்தில் நடித்த புரோசென்ஜித் சாட்டர்ஜியின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும் நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டு, அதனை அடிப்படையாக வைத்து 'பத்மஸ்ரீ' விருதுபெற்ற ஓவியர் வரைந்த படத்தையே குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.