Skip to main content

"இன்றைய சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் பெண் விடுதலையே காரணம்.." - சர்ச்சையில் சிக்கிய சிபிஎஸ்சி!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

பர


பெண்கள் தொடர்பாக சர்ச்சையான வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்சி அமைப்பின் மீது இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். சர்ச்சைகளுக்கும் சிபிஎஸ்சிக்கும் நீண்ட தொடர்பு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறையாவது சர்ச்சையான வினாத்தாளைத் தயாரித்து அரசியல் கட்சி, பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகிவரும் வரலாறு சிபிஎஸ்சி அமைப்புக்கு உண்டு. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிபிஎஸ்சி மாதத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வரை கொதிப்படைய வைத்துள்ளது. பெண்கள் தொடர்பாக நீண்ட பாராவாக கொடுக்கப்பட்டிருந்த அந்தக் கேள்வியில், பல்வேறு கருத்துகள் பெண்களுக்கு எதிராக நேரடியாக இருந்தன.

 

அந்த வினாத்தாளில் குறிப்பாக, தற்போது கணவர்களுக்குப் பெண்கள் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். அதனால், வேலைக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒழுக்கமின்மை அதிகரித்துவிட்டது. பெண் விடுதலை, குழந்தைகளின் ஒழுக்கமின்மைக்கு முதல் காரணமாக உள்ளது. பெண் விடுதலை தற்போதைய சமூகப் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது என ஒவ்வொரு வரியாக கொடுத்துவிட்டு, கீழே இந்தக் கேள்விகளுக்கு விடையாக 'எழுத்தாளர் ஒரு பேரினவாத நபர்' என்றொரு விடையும், 'எழுத்தாளர் வாழ்க்கையை மிக எளிதாகப் பார்க்கிறார்' என இரண்டாவது விடையாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விவகாரம் இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, “பாஜக அரசு குழந்தைகளுக்கு இதைத்தான் கற்றுத்தருகிறதா? பெண்கள் மீதான இந்த தாக்குதலைப் பாஜக ஆமோதிக்கிறது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்