Published on 27/08/2018 | Edited on 27/08/2018

தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவானான காக்னிஸன்ட் (Cognizant) நிறுவனம் சாஸ்போக்கஸ் (SaaSfocus) என்னும் கன்சல்டிங் நிறுவனத்தை கையகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் பரிவர்த்தனை தொகைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் இந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்குள் இந்த கையகப்படுத்துதல் (acquisition) நிறைவடையும் என்றும் காக்னிஸன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாஸ்போக்கஸ் நிறுவனம் சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தின் அங்கமாக இருந்தது.