நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மேலும் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக, அம்மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏஎன்ஐ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்திய அரசு மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா? என கேள்வி எழுப்பினார். உள்நாட்டு விவகாரத்தில் மூன்றாம் நபரோ சர்வதேச அமைப்போ தலையிட நாங்கள் விரும்பவில்லை. முற்றிலும் உள்நாட்டைச் சார்ந்த விவகாரத்திற்கு ஐ.நா தலையிட வேண்டும் என்கிறார் மம்தா. முதல்வராக இருக்கும் மம்தாவின் பேச்சு பொறுப்பற்ற செயலை காட்டுகிறது". இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.