புதுச்சேரியில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் 3 லட்சம் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச அரிசி உட்பட அரசின் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று 40 மாதங்களாகியும், இதுவரை 23 மாதங்களுக்கு இலவச அரிசி மற்றும் இலவச அரிசிக்கான பணத்தை வழங்க அரசு மறுத்து வருகிறது என்று கூறியும், கடந்த வாரம் ஆளுநர் கிரண்பேடி, 'கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை வழங்க வேண்டிய இலவச அரிசிக்கு பணத்தை வழங்க ஒப்புதல் அளித்தும், இதுவரை அதற்கான பணத்தை வங்கியில் செலுத்தவில்லை எனக் கூறியும் பா.ஜ.க சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் குடிமைப்பொருள் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 500- க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினரை காவல்துறையினர் தடுப்பு அமைத்து தடுத்தனர். ஆனாலும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு குடிமைப்பொருள் அலுவலகம் முன்பு ஓடிவந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை தடுப்பை மீறிய கட்சியினர் நுழைந்தது, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசிக்கான பணத்தை உடனே செலுத்த வேண்டும், இல்லை எனில் அனைத்து தொகுதி பொதுமக்களையும் திரட்டி பெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.