
நவராத்திரி துவங்கியது முதல் பல ஊர்களில் ராம் லீலா நாடகங்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பூஜை செய்ய தொடங்கிவிட்டனர். நேற்று புது டெல்லியை அடுத்த பழைய டெல்லியில் நடந்த நவராத்திரி ராம் லீலா நாடகத்தில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நடித்துள்ளார்.
இவர் இந்த நாடகத்தில் ஜனமஹாராஹாவாக நடித்துள்ளார். அதாவது சீதாவின் தந்தையாக நடித்துள்ளார். மேலும் இந்த நாடகத்தில் டில்லி பாஜக எம்எல்ஏ விஜேந்திர குப்தாவும் நடித்துள்ளார். இவர் அத்ரி மகரிஷி வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து ஹர்ஷவர்தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, “ சீதாவின் தந்தையாக இந்த நாடகத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லியிலுள்ள லவகுஷ கமிட்டியால் இந்த நாடகம் நடத்தப்பட்டது. சிறிய வயதில் இதுபோன்ற நாடகங்களை நிறைய பார்த்துள்ளேன், அதில் தற்போது நடித்துள்ளது மறக்கம்முட்யாத ஒன்று.” என்றார்.