அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி சிவசேனா கட்சி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தனித்தனியாக பிரம்மாண்டமான விழாக்கள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன. இதற்காக அயோத்தியில் பல்லாயிரக்கணக்கான இந்து அமைப்பினர் குவிந்து வரும் நிலையில், 1992ம் ஆண்டு ஏற்பட்ட பதற்றத்தை போன்று மீண்டும் ஏற்படாத வண்ணம் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் இத்தனை அமைப்பினர்கள் கூடுவதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பாதுகாப்பிற்காக போலிஸ்படை குவிப்பு.
அதேபோல ஜனகிரஹா மற்றும் தர்மசபை என்று இரண்டு கூட்டங்கள் நாளை அயோத்தில் நடைபெற உள்ளதால், ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் இந்து அமைப்பினர் அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர். இந்த கூட்டம் நடந்து முடிந்த பின்னர் அயோத்தியை சுற்றி 200 கி.மீ வரை வீடு வீடாக சென்று அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், அங்கு இருசக்கர வாகன பேரணியும் நடத்தப்பட உள்ளது. இதன்காரணமாக 3000 இஸ்லாமியர்கள் வேறு பகுதிக்கு சென்று விட்டனர். இந்த கூட்டத்திற்காக 2 லட்சம் பேர் கூட உள்ளதால் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடுப்பின் போது ஏற்பட்ட பதற்றத்தை போன்று மீண்டும் ஏற்படாதபடி பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.