அயோத்தியா வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்மீது வந்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், அந்த இடத்தை மூன்றாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமர்வு மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் அங்கம் அல்ல என தெரிவிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய 5 நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் முந்தைய தீர்ப்பு பொருந்தாது. நிலத்தின் உரிமை குறித்து அக்டோபர் 29ம் தேதி முடிவுசெய்யும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது. தீர்ப்பை தெரிந்துகொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.