நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக நேற்று முன்தினம் (12.06.2024) பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்; சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாரா லோகேஷ் - மனித வள மேம்பாடு; ஐடி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கிஞ்சராபு அட்சண்னைடு - வேளாண்மை, கூட்டுறவு, சந்தைப்படுத்தல், கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு மீன்வளம், கொள்ளு ரவீந்திரன் - சுரங்கங்கள் மற்றும் புவியியல், கலால் வரி, நாதெண்டல மனோகர் - உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள், பொங்குரு நாராயணா - நகராட்சி நிர்வாகம் & நகர்ப்புற வளர்ச்சித்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அனிதா வாங்கலபுடி - உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை, சத்ய குமார் யாதவ் - ஆரோக்கியம்; குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி, நிம்மலா ராமாநாயுடு - நீர்வள மேம்பாடு, நசியம் முகமது பாரூக் - சட்டம் மற்றும் நீதி; சிறுபான்மையினர் நலன், ஆனம் ராம்நாராயண ரெட்டி - நன்கொடைகள், பையாவுல கேசவ் - நிதி; திட்டமிடல்; வணிக வரிகள் மற்றும் சட்டமன்றம், அனகனி சத்ய பிரசாத் - வருவாய், பதிவு முத்திரைகள் துறை, கொலுசு பார்த்தசாரதி - வீட்டுவசதி, தகவல் தொடர்புத்துறை, டோலா பால வீராஞ்சநேய ஸ்வாமி - சமூக நலன்; மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன்; சசிவாலயம் & கிராம தன்னார்வலர், கோட்டிப்பட்டி ரவிக்குமார் - ஆற்றல், கந்துலா துர்கேஷ் - சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் ஒளிப்பதிவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கும்மாடி சந்தியா ராணி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்; பழங்குடியினர் நலன், பிசி ஜனார்தன் ரெட்டி - சாலைகள் மற்றும் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், டி.ஜி. பரத் - தொழில்கள் மற்றும் வர்த்தகம்; உணவு பதப்படுத்தும்முறை, எஸ்.சவிதா - பிற்படுத்தப்பட்டோர் நலன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் நலன்; கைத்தறி மற்றும் ஜவுளி, வாசம்செட்டி சுபாஷ் - தொழிலாளர், தொழிற்சாலைகள், கொதிகலன்கள் மற்றும் காப்பீட்டு மருத்துவ சேவைகள், கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ் - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி- போக்குவரத்து; இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.