Skip to main content

55,000 கோடி கடன், 9000 கோடி சொத்துக்களை விற்க முடிவு- மத்திய அரசு

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

air

 

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் பிற சொத்துகளை  ரூ. 9 ஆயிரம் கோடிக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 55,000 கோடி கடன் உள்ளது. இதனை குறைக்கும் பொருட்டு மும்பை, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு சொத்துக்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பே ஏர் இந்தியாவில் அரசுக்கு உள்ள பங்குகளில் 76 சதவீதத்தை தனியாருக்கு தர அரசு முன்வந்தது. அத்துடன் நிர்வாக பொறுப்பையும் தனியாரிடம் தர தயாராக உள்ளதாக அறிவித்தது. ஆனால் எந்தவொரு நிறுவனமும் இதனை வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்