Published on 07/02/2022 | Edited on 07/02/2022

இன்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12வது ஆண்டு விழா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்புப் பூஜையும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் சிறப்பான ஆட்சி செய்து வருகிறது என்றார். அண்மையில் நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.